Posted by Unknown on Monday, 10 February 2014


               சமந்தா புறக்கணிப்பா? அஞ்சான் போஸ்டர் ஏற்படுத்திய பரபரப்பு
                                                               CLICK MORE IMAGES

சர்ச்சைகளுக்கு சமந்தாவுக்கு ஏகப்பட்ட ஒற்றுமை. சமீபத்தில் தோல் வியாதிக்கான சிகிச்சை, சித்தார்த்துடன் காதல், மகேஷ்பாபுவுடன் போஸ்டர் மோதல் என சர்ச்சையில் சிக்கி வந்த சமந்தாவுக்கு இன்னொரு சர்ச்சை தேடி வந்துள்ளது. அதுதான் அஞ்சான் பட போஸ்டர்.
சமீபத்தில் வெளியான அஞ்சான் பட போஸ்டரில் சூர்யாவிடம் படம் மட்டுமே உள்ளதாகவும், அந்த படத்தின் ஹீரோயினான என்னை பட நிறுவனம் புறக்கணிக்கிறது என்றும் இதில் சூர்யாவின் தலையீடு அதிகம் இருப்பதாக சந்தேகம் உள்ளது என்றும் சமந்தா இணையதளத்தில் கருத்து தெரிவித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஆனால் இந்த தகவலை அவசர அவசர மறுக்கும் சமந்தா, இதுபோன்ற கருத்தை நான் டுவிட்டர் போன்ற எந்த இணையதளத்திலும் தெரிவிக்கவில்லை என்றும், இது வேண்டுமென்றே யாரோ கிளப்பிவிட்ட வதந்தி என்றும் கூறிய சமந்தா, தன் மீது பொறாமைபடும் யாரோதான் இவ்விதமான வதந்தியை கிளப்பிவிடுவதாகவும் கூறினார். இந்த வதந்தி குறித்து தான் சூர்யாவிடமும், இயக்குனர் லிங்குசாமியிடமும் விளக்கம் அளித்துவிட்டதாகவும், அவர்கள் யாரும் என்னை தவறாக நினைக்கவில்லை என்றும் கூறியுள்ளனர். ஆனால் அஞ்சான் படத்தில் மேலும் ஒரு பாலிவுட் நடிகை நடிக்கவிருப்பதால் சமந்தா அதிருப்தியில் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

{ 0 comments... read them below or add one }

Post a Comment