ஏப்ரலில் வெங்கட் பிரபு - சூர்யா படம் துவங்குமா?

Posted by Unknown on Sunday, 16 February 2014

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருப்பதாக ஏற்கெனவே கூறப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு - சூர்யா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்புகள் வருகிற ஏப்ரலில் துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா தற்பொழுது இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் அஞ்சான் படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் இரட்டை வேடத்தில் சூர்யா நடித்துவருவதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் படுவேகமாக நடைபெற்றுவருகின்றன. மஹாராஷ்டிரா, மும்பை, புனே போன்ற இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்றுவருகின்றன. படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு சுமார் மூன்று மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில்
படத்தின் 50 சதவிகிதக் காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அஞ்சான் திரைப்படம் வருகிற சுதந்திர தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சான் திரைப்படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இப்படம் குழந்தைகளுக்கும் பிடித்தமான படமாக அமையுமாறு உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் பற்றிய செய்திகள் விரைவில் வெளியாகும் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

{ 0 comments... read them below or add one }

Post a Comment