ஒரே நாளில் ஒன்றரை லட்சம் ஹிட்டுகளை அள்ளியது மான் கராத்தே டீசர்!

Posted by Unknown on Sunday, 16 February 2014

சிவகார்த்திகேயன் - ஹன்சிகா இணைந்து நடித்துவரும் மான்கராத்தே திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. வெளியாகி 24 மணி நேரத்தில்
மட்டும் இதன் டீசர் சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான ஹிட்டுகளைப் பெற்றிருக்கிறது.

எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் இப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குனரான திருக்குமரன் இயக்கிவருகிறார். சுமார் 30 கோடிகள் பட்ஜெட்டில் இப்படம் உருவாகிவருவதாகக் கூறப்படுகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார்.

கொலவெறி புகழ் இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வருகிற மார்ச் ஒன்றில் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

நேற்று வெளியான இப்படத்தின் டீசர் இளமைத் துள்ளலுடன் இருப்பதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இப்படத்தின் தமிழக வினியோக உரிமைகள் இப்பொழுதே சுமார் 30 கோடிகள் அளவிற்கு விற்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் வெளிமாநில வினியோக உரிமைகள் இன்னும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து வெற்றிகளைக் கொடுத்துவரும் சிவகார்த்திகேயனுக்கு இப்படமும் பெரும் வெற்றிப்படமாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

{ 0 comments... read them below or add one }

Post a Comment