அறுவை சிகிச்சையைத் தள்ளிப்போடாதீர்கள் - அஜித்திற்கு மருத்துவர்கள் எச்சரிக்கை!

Posted by Unknown on Sunday, 16 February 2014

ஆரம்பம் படப்பிடிப்புகளின் போது ஏற்பட்ட சிறு விபத்தினால் தல அஜித்திற்கு காலில் காயம் ஏற்பட்டது. படப்பிடிப்புச் சமயத்தில் முதலுதவி
பெற்றுக்கொண்டு தொடர்ந்து படத்தினை முடித்துக் கொடுத்தார் அஜித். ஆனால் விரைவில் அவர் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டுமென மருத்துவர்கள் எச்சரித்திருந்தனர்.

ஆரம்பம் திரைப்படம் நிறைவடைந்ததும் அறுவை சிகிச்சை செய்யலாம் என்று முடிவு செய்திருந்த நிலையில் ஆரம்பம் படம் நிறைவடைந்ததுமே வீரம் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கின. இதனால் அறுவை சிகிச்சையை வீரம் படத்திற்குப் பிறகு செய்துகொள்ளத் தீர்மானித்தார் அஜித்.

கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் வீரம் படத்தின் பணிகள் நிறைவடைந்தன. வீரம் படம் நிறைவடைந்ததும் விடுமுறையைக் கொண்டாட தனது குடும்பத்துடன் ஆஸ்திரேலியா சென்றார். ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பிய சில நாட்களில் தற்பொழுது கௌதம் மேனன் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புகள் துவங்கவுள்ளன. இதனால் அறுவை சிகிச்சை செய்தால் இப்படத்தின் படப்பிடிப்புகள் தாமதமாகுமோ என்பதால் மீண்டும் அறுவை சிகிச்சையைத் தள்ளிப்போடும் எண்ணத்தில் அஜித் இருப்பதாகவும், ஆனால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சையைத் தள்ளிப்போட வேண்டாம் என்றும் எச்சரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

{ 0 comments... read them below or add one }

Post a Comment