இன்று துவங்குகிறது உதயநிதியின் மூன்றாவது படத்தின் படப்பிடிப்பு!

Posted by Unknown on Sunday, 16 February 2014

ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள நண்பேன்டா திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இன்று துவங்கவுள்ளன.

இயக்குனர் ராஜேஷின் உதவி இயக்குனரான ஜெகதீஸ் இயக்கவுள்ள இப்படத்தில் மீண்டும் உதயநிதியுடன் ஜோடி சேர்ந்துள்ளார் நயன்தாரா. அவரின் முந்தைய படங்களைப் போலவே இப்படத்தையும் உதயநிதி ஸ்டாலினே தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்கும் ஹாரிஸ் ஜெயராஜே இசையமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

உதயநிதி - நயன்தாரா கூட்டணியில் தற்பொழுது இது கதிர்வேலன் காதல் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பெரும்பாலான ரசிகர்கள் இப்படத்தினை வெகுவாக ரசித்ததாகக் கூறிவருகின்றனர். சுந்தரபாண்டியன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இப்படம் வெளியாகியுள்ளது.

நண்பேன்டா திரைப்படத்திலும் சந்தானம் நடிக்கவுள்ளதால் படத்தினைப் பற்றிய எதிர்பார்ப்புகள் இப்பொழுதே ஏற்பட்டுவருகின்றன.

{ 0 comments... read them below or add one }

Post a Comment