அடுத்த வாரத்தில் நான் சிகப்பு மனிதன் டீசர்!

Posted by Unknown on Sunday, 16 February 2014

மெஹாஹிட் படமான பாண்டியநாடு திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஷால் நடித்துவரும் நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தின் டீசர் அடுத்த வாரத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விஷால் நடித்த தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் திரு இயக்கிவரும் திரைப்படம் நான் சிகப்பு மனிதன்.
யூ.டி.வி.மோசன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விஷால் தயாரித்துவரும் இப்படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்க லக்‌ஷ்மிமேனன் விஷாலின் ஜோடியாக நடித்துவருகிறார்.

ஜி.வி.பிரகாஷ்குமாரின் புதுவகை இசையில் இப்படத்தின் இசை உருவாகிவருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் வருகிற மார்ச் முதல் வாரத்தில் நிறைவடையலாம் என்றும், படப்பிடிப்புகள் நிறைவடைந்ததும் டப்பிங் மற்றும் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் துவங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் மிக வேகமா நிறைவடைந்துவருவதால் வருகிற ஏப்ரல் மாதத்தில் படத்தினை வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது. எனவே அடுத்த வாரத்தில் இப்படத்தின் டீசரை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான் திரைப்படமும் ஏப்ரலில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

{ 0 comments... read them below or add one }

Post a Comment