அடுத்த வாரத்தில் சந்தோஷ் சிவனின் இனம் டீசர் வெளியீடு!

Posted by Unknown on Sunday, 16 February 2014

பிரபல ஒளிப்பதிவாளரும், இவ்வாண்டு பத்மஸ்ரீ விருதினை வென்றுள்ளவருமான ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தயாரித்து, இயக்கியிருக்கும் இனம் திரைப்படத்தின் டீசர் அடுத்த வாரத்தில் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

சந்தோஷ் சிவன் பிலிம்ஸ் சார்பில் உருவாகியிருக்கும் இப்படம் இலங்கைப் போரின்போது, ஆதரவற்றோருக்கான முகாம்களில் தங்கவைக்கப்பட்ட இளைஞர்களைப் பற்றிய கதையாக விரிகிறது. இலங்கையின் அரசியல் நிலவரத்தைப் பற்றியும் இப்படம் பேசும் என்றும் கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி பூசான் சர்வதேசத் திரைப்படவிழாவில் இப்படம் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப்படததிற்கு நடிகர் அரவிந்த்சாமி பின்னணிக்குரல் கொடுத்துள்ளார். விஷால் சந்திர சேகர் இசையில், இப்படத்தினை எழுதி, தயாரித்து, இயக்கி
ஒளிப்பதிவும் செய்துள்ளார் சந்தோஷ்சிவன்.

உணர்வுப்பூர்வமான கதைக்களத்தினை எடுத்துள்ள சந்தோஷ்சிவனின் இப்படம் வருகிற ஏப்ரல் மாதத்தில் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

{ 0 comments... read them below or add one }

Post a Comment