சிவகார்த்திகேயனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Posted by Unknown on Monday, 17 February 2014

நீண்ட நாட்களாகச் சினிமாவில் இருக்கும் மாஸ் ஹீரோக்களே தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுக்கமுடியாத இந்தக் காலத்தில், தொடர்ந்து ஐந்து வெற்றிப்படங்களை அறிமுகமான 2 வருடங்களில் தந்திருப்பதோடு தயாரிப்பாளர்களின் நம்பகமான ஹீரோவாகவும் உருவெடுத்திருக்கும்
சிவகார்த்திகேயன் இன்று தனது 29 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2012ல் வெளியான மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு ஹீரோவாக அறிமுகமானார்
சிவகார்த்திகேயன். மெரினாவில் நடிப்பதற்கு முன்பே விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் அறிமுகமாகி
தமிழக மக்களிடம் பிரபலமானார் சிவகார்த்திகேயன். கலக்கப் போவது யாரு நிகழ்ச்சிக்குப் பிறகு அது இது எது, ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்,
ஜோடி நம்பர் ஒன் போன்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும் கலக்கிவந்தார்.

மெரினா திரைப்படத்திற்குப் பிறகு தனுஷின் 3 படத்திலும், பின்னர் மனம் கொத்திப் பறவை படத்திலும் நடித்தார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனுக்கு மிகமுக்கியமான ஆண்டாக அமைந்து என்றால் அது மிகையில்லை. சிவகார்த்திகேயன், பிரியா ஆனந்த் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் திரைப்படம் மெஹாஹிட்டானது. அதன்பிறகு மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படமும் வசூலை வாரிக்குவித்தது.

கடந்த ஆண்டு இறுதியில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் பெரும் மைல்கல்லாக அமைந்து, பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டிலும் சாதித்தது. தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் சிவகார்த்திகேயன் தற்பொழுது கோலிவுட்டின் வசூல் ராஜாவாக வலம்வருகிறார்.

சிவகார்த்திகேயன் - ஹன்சிகா நடிப்பில் தற்பொழுது உருவாகிவரும் மான்கராத்தே திரைப்படமும் மாஸ்ஹிட்டாகும் என்று ரசிகர்களும்,
திரைத்துறையினரும் பேசிவருகின்றனர்.

இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் சிவகார்த்திகேயனுக்குப் பிளஸ் மீடியா பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது. இன்னும் பலப்பல வெற்றிகளை அடையவும் வாழ்த்துக்கள்!

{ 0 comments... read them below or add one }

Post a Comment