விரைவில் நிறைவடையவுள்ளது முண்டாசுப்பட்டி படப்பிடிப்புகள்!

Posted by Unknown on Sunday, 16 February 2014

புதுமுக இயக்குனர்களின் திறமையை அறிந்து அவர்களுக்கு வாய்ப்புக்களை அளித்து தொடர்ந்து வெற்றிப்படங்களைத் தந்துவரும் தயாரிப்பு நிறுவனமான திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துவரும் திரைப்படமான முண்டாசுப்பட்டி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் நிறைவடையவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

விஷ்ணு மற்றும் நந்திதா முக்கிய வேடத்தில் நடித்துவரும் இப்படத்தினை அறிமுக இயக்குனரும், குறும்பட இயக்குனருமான ராம் இயக்கிவருகிறார். இதே பெயரில் உருவான குறும்படம்தான் தற்பொழுது திரைப்படமாக உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்புகள் பெருமளவு நிறைவடைந்துள்ளதாகவும், எஞ்சிய காட்சிகள் இம்மாத இறுதிக்குள்
நிறைவடையலாம் என்றும் கூறப்படுகிறது. படப்பிடிப்புகள் நிறைவடைந்ததும் இப்படத்தின் வெளியீடு குறித்து அறிவிக்கப்படும்.

குறும்படமாக எடுக்கப்பட்ட பண்ணையாரும் பத்மினியும் திரைப்படம் பெரும் வெற்றியடைந்திருப்பதைப் போலவே இப்படமும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

{ 0 comments... read them below or add one }

Post a Comment