சிம்பு – நயன் தாரா நடிக்கும் இது நம்ம ஆளு படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 50% முடிந்துவிட்டது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க ஹன்சிகா அழைக்கப்பட்டுள்ளார். ஹன்சிகாவும் இதற்கு ஒப்புக்கொண்டார் என்றே தெரிகிறது.
படத்தின் கதைப்படி, சிம்புவும் ஹன்சிகாவும் காதலர்கள். ஒரு கட்டத்தில் ஹன்சிகாவுடன் மோதல் ஏற்பட்டு காதலை பிரேக் அப் செய்துவிட்டு சோகத்தில் இருக்கிறார் சிம்பு. அந்நேரத்தில் அவருக்கு அறிமுகமாகும் நயன்தாராவிடம் தனது மனதை பறிகொடுத்த சிம்பு, நயன்தாராவை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கிறார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கிறது. திருமணத்திற்கு ஆறு மாதங்கள் இருக்கும்போது, ஹன்சிகா மீண்டும் மனம் திருந்தி சிம்புவுடன் சேர முயற்சி செய்கிறார். கடைசியில் சிம்பு யாரை திருமணம் செய்தார் என்பதுதான் க்ளைமாக்ஸ்.

{ 0 comments... read them below or add one }
Post a Comment