த்ரிஷா சினிமாவில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக நடித்த போதும் இதுவரை ஒரு மலையாளப் படத்தில் கூட நடித்தது இல்லை. காரணம், மலையாளப் படங்களில் சம்பளம் குறைவு என்பதாலும், சீனியர் நடிகர்களுடன் நடிக்க வேண்டியது இருக்கும் என்பதாலும் நடிப்பதை தவிர்த்து வந்திருக்கிறார் த்ரிஷா.
ஆனால் இப்போது மலையாளப் படங்களில் நடிக்கத் தயார் என்று அறிவித்திருக்கிறார்.கடந்த சில தினங்களுக்கு முன்பு கொச்சி சென்றிருந்த திரிஷா அங்கு நிருபர்களிடம் கூறியதாவது:
எனக்கு மலையாளப் படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. நல்ல கதை அமைந்தால் உடனே நடிக்க ரெடியாக இருக்கிறேன். மலையாளத்தில் மோகன்லால் எனக்கு பிடித்த நடிகர். தமிழ் படங்களுக்கு கேரள மக்கள் நல்ல வரவேற்பை கொடுப்பது சந்தோஷமாக இருக்கிறது.
கேரளா எனக்கு மிகவும் பிடித்த இடம். என் பாட்டி பாலக்காட்டில் வசித்து வருகிறார் 3 மாதத்துக்கு ஒரு முறை அவரை பார்பதற்காக கேரளா வந்துவிடுவேன். எனது தமிழ் படங்களின் ஷூட்டிங் இங்கு நடந்துள்ளது. இங்கு விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நடித்த அனுபவங்கள் மறக்க முடியாதவை என்று கூறியுள்ளார் திரிஷா.

{ 0 comments... read them below or add one }
Post a Comment