நயன்தாரா-ஹன்சிகா ஒரே படத்தில் ??

Posted by Unknown on Sunday, 16 February 2014

இது நம்ம ஆளு படப்பிடிப்பு ஆரம்பத்தில் இருந்து ட்விஸ்ட் மேல ட்விஸ்ட். சிம்பு நடிப்பில், டி. ராஜேந்தர் தயாரிப்பில், பனசங்க இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம். தற்போது இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்திருக்கிறது. கடைசி கட்ட ஷூட்டிங்கில்தான் அடுத்த பரபரப்பு இருக்கிறது. படத்தில் திடீரென்று நயன்தாரா கமிட்டாகி படத்துக்கு எதிர்பார்ப்பை எகிற வைத்ததைபோல அடுத்த அதிரடி இருக்கிறது.

சரி இப்போ கதைப்படி சிம்புவின் முதல் காதல் தோற்றுவிடும், காதல் தோல்வியால் திருமணமே வேண்டாம் என்று திரியும் சிம்புவுக்கு பெற்றவர்கள் நயன்தாராவை பெண் பார்த்து நிச்சயதார்த்தம் செய்து விடுவார்கள். 6 மாதத்துக்கு பிறகுதான் கல்யாணம். அதுக்குள்ள லவ் பண்ணிக்குங்க என்பதுதான் பெற்றவர்களின் கண்டிஷன்.
அவர்களுக்கு லவ் வந்துச்சா வரலியா? சிம்புவுக்கு இருந்த மாதிரியே நயன்தாராவுக்கும் ஒரு முதல் காதல் இருந்ததா? ச்டொரிய விட்டு வெளில போகுதுல?? சரி கதைப்படி சிம்புவின் முதல் காதலி யார்? என்பதுதான் இப்போ ப்ரொப்லெம். அதாவது முதல் காதலியாக நடிப்பவர் யார் என்பது?

அந்த கேரக்டரை நயன்தாரா அளவுக்கு பவர்புல்லான ஒரு ஹீரோயின் செய்தால்தான் நன்றாக இருக்கும் என்று இயக்குனர் பாண்டிராஜ் கருத்து. அந்த கேரக்டர்ல ஹன்சிகா மோத்வானி நடிக்க வச்சிட்டீங்கன்னா நல்ல ரேட்க்கு கொடுத்து படத்தை வாங்கிக்கிறோம்னு டிஸ்ட்ரிபியூட்டர்களும், தியேட்டர்காரர்களும் சொல்லியிருக்காங்களாம். இவங்கள என்ன செய்ய ??  

{ 0 comments... read them below or add one }

Post a Comment