2015ல் அஜீத்திற்கு சம்பளம் 50 கோடி!

Posted by Unknown on Sunday, 16 February 2014

தமிழ் சினிமாவை பொருத்தவரையில் அஜீத்தால் வாழ்ந்த இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பலர் உள்ளனர், என்றாலும் முழுமையாக வாழ்ந்தவர் ஏ.எம்.ரத்னம் தான். பிரம்மாண்ட படங்களை எடுத்து பெரும் வெற்றி பெற்றவர். அவர் எடுத்த சில படங்கள் சரி வர ஒடாததால் நஷ்டம் அடைந்தார்.
மேலும மகன்களின் சொந்த நடிப்பு, சொந்த இயக்கம் உள்ளிட்ட காரணங்களால் பெரும் நஷ்டத்திற்கு ஆளானதாக கூறப்படுகிறது. கடும் பிரச்சனையில் இருந்த அவருக்கு, அவரால் வளர்ந்த ஹீரோக்கள் கூட உதவவில்லையாம்.
இந்நிலையில் செய்வதறியாமல் திகைத்து நின்ற நேரத்தில் தோல்கொடுத்து அருதலலித்திருகிரார் அஜீத். அதன் பிறகு உருவான படம் தான் ஆரம்பம். இதன் பின் சரிவில் இருந்த மீண்ட ரத்னம் தற்போது தொடர்ந்து அஜீத் கால்ஷீட் கொடுக்க, இதோ மறுபடியும் ஒரு பிரமாண்டமான படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார். தற்போது அஜீத் நடிக்கவுள்ள படத்திற்கு பிறகு ஒரு வேறொரு படத்தில் நடித்துவிட்டு மீண்டும் ஏ.எம்.ரத்னத்திற்கே கால்ஷீட் தருவதாக அஜீத் வாக்குறுதி கொடுத்துள்ளாராம் . அந்த படத்திற்கு தான் ஐம்பது கோடி சம்பளம் தருவேன் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் ரத்னம் கூறிவருகிறாராம்...

{ 0 comments... read them below or add one }

Post a Comment