விரைவில் வெளியாகவிருக்கும் ஜெயம் ரவியின் பூலோகம்!

Posted by Unknown on Sunday, 16 February 2014

ஜெயம் ரவி திரிசா நடிப்பில் உருவாகிவரும் பூலோகம் திரைப்படத்தின் டப்பிங் வேலைகள் தற்பொழுது நடைபெற்றுவருகின்றன. இப்படத்தின் முதல் பாதி டப்பிங் வேலைகள் நிறைவுற்றிருப்பதாகவும், அடுத்த பாதி டப்பிங் வேலைகள் தற்பொழுது நடைபெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது.

எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி மீண்டும் குத்துச் சண்டை வீரராக இப்படத்தில் நடித்துள்ளார். கல்யாண்
கிருஷ்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரித்துவரும் இப்படத்தில் பிரகாஷ்ராஜ், பொன்வண்ணன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இப்படத்திற்கு
இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் மாதத்தில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

ஜெயம் ரவி - திரிசா இணைந்து நடித்த உனக்கும் எனக்கும் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது நினைவுகூறத்தக்கது. கடந்த 2010லேயே பூலோகம்
திரைப்படம் அறிவிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

{ 0 comments... read them below or add one }

Post a Comment