இரண்டு விதமான ஹேர் ஸ்டைலில் நடிக்கிறார் விஜய்!

Posted by Unknown on Tuesday, 18 February 2014





கெட்டப் சேஞ்ச் என்று உடலை வருத்திக்கொள்வது அல்லது ஹேர் ஸ்டைலை மாற்றிக்கொள்வது என சமீபகாலமாக படத்துக்குப்படம் தங்களை வித்தியாசப்படுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள் முன்னணி ஹீரோக்கள்.
அந்த வகையில், மங்காத்தா தொடங்கி வீரம் வரைக்கும் சால்ட் அண்ட் பெப்பபர் ஹேர் ஸ்டைலில் நடித்தார் அஜீத். அதையடுத்து இப்போது கெளதம்மேனன் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்காக, தனக்கு சீரியல் கில்லர் வேடம் என்பதால், கெட்டப்பை அதிரடியாக மாற்றுகிறார்.
அதற்காக தனது ஹேர் ஸ்டைலை இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசப்படுத்திக்கொண்டிருக்கிறார்.
அவரையடுத்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் விஜய்யும் தனது ஹேர் ஸ்டைலை இதுவரை தான் நடிக்காத புதிய பாணிக்கு மாற்றியிருக்கிறார்.

அப்படத்தில் இரண்டு வேடம் என்பதால், அழகிய தமிழ் மகனைப்போன்று சாதாரணமாக இல்லாமல், தன்னை முற்றிலுமாக வேறுபடுத்திக்காட்ட வேண்டும் என்பதற்காக பாடி லாங்குவேஜ் மட்டுமின்றி, ஹேர் ஸ்டைலை அதிக வித்தியாசப்படுத்திக்காட்டுகிறாராம்.
முன்னதாக, பாலிவுட்டில் இருந்து ஒரு ஹேர் டிரஸ்ஸரை வரவைத்து அவர் கொடுத்த சில டிப்ஸைக்கொண்டு விஜய்யை பக்காவாக மாற்றியிருக்கிறார் முருகதாஸ். தற்போது முதல் கெட்டப்பில் நடித்து வரும் விஜய், அடுத்து இன்னொரு கெட்டப்புக்காகவும் வேறொரு பாணியில் ஹேர் ஸ்டைலை மாற்றி நடிக்கிறாராம்.

{ 0 comments... read them below or add one }

Post a Comment