ஷாருக்கானுக்கு பதிலாக தனுஷ்!

Posted by Unknown on Monday, 17 February 2014

கடந்த சில தினங்களுக்கு முன்பு தனுஷ் தனது இரண்டாவது இந்திப்படம் ஷூட்டிங் துவங்கியதாக டிவ்ட்டெரில் செய்தி வெளியிட்டு இருந்தார். அப்படத்தின் இயக்குனர் பால்கி தனுசுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் .
படத்தில் தனக்கு சவாலான மாற்றுத்திறனாளி கதாபாத்திரம் என்பதாலும் படத்தில் அமிதாப்பச்சன் நடிக்கிறார் என்பதாலும் மிகுந்த சந்தோஷத்தோடு நடிக்க ஒப்புக்கொண்டார் தனுஷ்.
இப்படத்தில் முதலில் அமிதாப்புடன், ஷாரூக்கான் நடிக்க இருந்ததாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில் ராஞ்சனாவில் தனுஷின் நடிப்பை பார்த்த பால்கின், ஷாருக்கானுக்கு பதிலாக தனுஷை நடிக்க வைக்க முடிவு செய்து அழைப்பு விடுத்துள்ளார். இது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

{ 0 comments... read them below or add one }

Post a Comment