நயன்தாராவுக்கு அதிக சம்பளம்?

Posted by Unknown on Monday, 17 February 2014

பாலிவுட்டில் வெளியான கஹானி தமிழில் ‘நீ எங்கே என் அன்பே என்ற பெயரிலும் அனாமிகா என்ற பெயரில் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
இப்படம் பற்றி இயக்குனர் சேகர் கம்முலா கூறியதாவது: இப்படத்தில் நயன்தாரா நடித்தது மிக பொருத்தமாக அமைந்துள்ளது இந்தியில் நடித்த வித்யாபாலனை விட சிறப்பான நடிப்பை வெளியிட்டிருக்கிறார் நயன்தாரா. இப்படத்தில் நடிப்பதற்காக வித்யாபாலனை விட நயன்தாராவுக்கு அதிக சம்பளம் தரப்பட்டுள்ளது என்று பேசிக்கொள்கிறார்கள்.
சம்பளம் எவ்வளவு கொடுத்தார் என்பது தயாரிப்பாளருக்குத்தான் தெரியும். ஆனால் அவருக்கு தரப்பட்ட சம்பளம் அவரது தகுதிக்கு பொருத்தமானது தான். நயன்தாராவின் நடிப்பு எனக்கு திருப்தியாக உள்ளது .
இந்தி ரீமேக்காக இருந்தாலும் இப்படத்தின் திரைக்கதையை முற்றிலும் மாற்றி இருக்கிறேன். மேலும் கர்ப்பிணி போன்ற கதாபாத்திரமும் மாற்றப்பட்டது. பெண்கள் துணிச்சலானவர்கள் எனவே கர்ப்பிணி வேடம்போட்டு அந்த கேரக்டருக்கு கருணை தேடவிரும்பவில்லை.
மேலும் தெலுங்கில் நான் இயக்கிய லீடர் படத்தை தமிழில் ரஜினியை பார்க்கும் படி கேட்டுக்கொண்டேன். அவர் நடித்து அப்படத்தை இயக்க வேண்டும் என்பது என் கனவு என்று சேகர் கம்முலா கூறினார்.

{ 0 comments... read them below or add one }

Post a Comment