ஜில்லாவும் ஓடல, வீரமும் ஓடல: கேயார்!

Posted by Unknown on Wednesday, 19 February 2014





 விஜய்யின் ஜில்லாவும் அஜீத்தின் வீரமும், மிகப்பெரிய அளவில் வசூலில் கலக்கியதாக படம் வெளியான போது தகவல்கள் வெளியாயின. முதல் வாரத்தில் 60 கோடி வசூலானது என்று செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் அந்த படங்கள் எதுவும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கொடுக்கவில்லை என்று கேயார் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 முன்பு விநியோகஸ்தர் சங்க தலைவராக இருந்த கேயார் படம் தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் போதே அதன் உண்மையான நிலவரத்தை  எல்லா திரைப்பட விழாக்களிலும் கூறுவார்.. சமீபகாலமாக பட வசூல் குறித்து அவர் எதுவும் கூறுவது கிடையாது. இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தலைவராக பொறுப்பு வகிக்கும்கேயார்
நேற்று ‘குக்கூ’ பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார். அப்போது பேசிய அவர்  ‘இந்த 2014 ம் வருஷத்தில் வெளியாகி ஓடிய ஒரே ஹிட் படம்னா அது கோலிசோடாதான். பெரிய பெரிய பட்ஜெட் படங்கள் என்று சொல்லப்பட்ட படங்கள் எல்லாம் படு பயங்கர லாஸ். தயாரிப்பாளருக்கு பத்து பைசா தேறல’ என்று கூறினார்.. அவர் கூறியது வீரம், ஜில்லா பற்றித்தான்  என்று கோடம்பாக்க வட்டாரத்தில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

{ 0 comments... read them below or add one }

Post a Comment