Posted by Unknown on Monday, 10 February 2014


                                    திரிஷ்யம் ரீமேக்கை இயக்குகிறார் பி.வாசு!

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பிரபலமான திரில்லர் திரைப்படமான திரிஷ்யம் படத்தின் கன்னட ரீமேக்கினை இயக்குனர் பி.வாசு இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் கன்னட ரீமேக்கில் ரவிச்சந்திரன் ஹீரோவாக நடிக்கவுள்ளார். மலையாளத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை மீனாவே இப்படத்திலும்
ஹீரோயினாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.
திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கவுள்ளார். மலையாளத்தில் இப்படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் தமிழிலும்
இயக்கவுள்ளார். தமிழில் இப்படத்தின் ஹீரோயின் மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் ஜூன் மாதத்தில் தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது.

{ 0 comments... read them below or add one }

Post a Comment