Posted by Unknown on Monday, 10 February 2014

விஷாலின் பாண்டியநாடு நூறு நாட்களைக் கடந்து சாதனை!




விஷால் – லக்‌ஷிமேனன் நடிப்பில் கடந்த நவம்பர் 2ல் வெளியான பாண்டிய நாடு திரைப்படம் நேற்று தனது நூறாவது நாளை நிறைவு செய்தது.
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் – லக்ஷ்மி மேனன், பாரதி ராஜா மற்றும் பலர் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டில் இடம்பிடித்தது.

விஷாலின் சொந்தப் பட நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி சார்பில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படமான பாண்டிய நாடு திரைப்படம் மாபெரும்
வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி, யூ.டி.வி.மோசன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தைத் தயாரித்துவருகிறது. இப்படத்தினை விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர் உள்ளிட்ட படங்களை இயக்கிய திரு இயக்கிவருகிறார். இப்படத்திலும் விஷாலின் ஜோடியாக லக்‌ஷ்மி மேனன் நடித்துவருகிறார். இப்படத்தினைத் தொடர்ந்து விஷால் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

{ 0 comments... read them below or add one }

Post a Comment