Posted by Unknown on Thursday, 13 February 2014

பாலா படத்தில் கரகம் எடுக்கவிருக்கிறார் வரலட்சுமி!


‘பாலா படத்தில் சரத்குமா‌ரின் மகள் வரலட்சுமி நடிக்கிறாராம்.’ இயக்குனர் பாலா தனது பரதேசி திரைப்படத்திற்குப் பிறகு கரகாட்டத்தை மையப்படுத்தி புதிய படமொன்றை இயக்கவுள்ளார்.
இதில் நாயகனாக சசிக்குமார் நடிக்கிறார். படத்திற்கான இசை இசைஞானி இளையராஜா. பெயரிடப்படாத இப்படத்தில் முதலில் நடிகை ஸ்ரேயா நடிக்க இருப்பதாகச் சொல்லப்பட்டது. இந்நிலையில், தற்போது அந்தக் கரகாட்டக்காரி கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடிப்பார் என்று தெரிகிறது.
கரகாட்டம் சம்பந்தமான கதையை தயார் செய்துவரும் பாலா, அதில் நடனமாடத் தெரிந்த ஒரு நடிகை கிடைத்தால் தான், அந்த கதாபாத்திரத்தின் தன்மையை புரிந்துகொள்ள முடியும் என நினைக்கிறார்.

அதற்கேற்ற மாதிரி நடனம் ஆடத்தெரிந்த வரலட்சுமியிடம் இந்தக்கதையையும் அவரது கேரக்டரையும் பற்றிச் சொல்லவே துள்ளிக்குதித்து விட்டாராம் வரலட்சுமி. இதற்குமுன்பே ஸ்ரேயா, ஸ்ராவந்தி ஆகிய நடிகைகளையும் வைத்து டெஸ்ட் ஷூட் செய்து பார்த்திருக்கிறார் பாலா.. ஏற்கனவே, அவன் இவன் படத்தில் வரலட்சுமியை நடிக்க வைக்க பாலா முயற்சி செய்தார். ஆனால் அப்போது அம்முயற்சி கைகூடவில்லை. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்க வேண்டியதுதான்.

{ 0 comments... read them below or add one }

Post a Comment