Posted by Unknown on Thursday, 13 February 2014

தமிழில் “தலப்பாகட்டி” ஆகிறது மலையாள உஸ்தாத் ஓட்டல்..


மலையாளத்தில் 2012ம் ஆண்டு ரிலீசாகி மாபெறும் வெற்றிபெற்ற படம் உஸ்தாத் ஓட்டல்.
நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், நித்யா மேனன், திலகன் ஆகியோர் நடித்திருந்த இந்த படத்தை அன்வர் ரஷீத் டைரக்ட் செய்திருந்தார். தற்போது இந்தப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. “தலப்பாகட்டி” என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகிறது. மலையாளத்தில் தயாரித்த மேஜிக் பிரேம்ஸ் நிறுவனமே தமிழிலும் தயாரிக்கிறது.
கழுகு, சிவப்பு படங்களை இயக்கிய சத்யசிவா இயக்கவுள்ள இந்த படத்தில் துல்கர் சல்மான் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபுவும், திலகன் கேரக்டரில் ராஜ்கிரணும், நித்யா மேனன் கதாபாத்திரத்தில் நஸ்ரியாவும் நடிக்கிறார்கள்.


பாரம்பரியமாக ஓட்டல் நடத்தும் திலகன் தன் பேரன் துல்கரை வெளிநாட்டில் படிக்க வைக்கிறார். துல்கர் படித்து திரும்பும்போது, பெருகிவிட்ட நவீன ஓட்டல்களுடன் போட்டிபோட முடியாமல் தடுமாறி, மூடும் நிலையில் இருக்கிறது அந்த ஓட்டல். வெளிநாட்டில் படித்த துலகர் தங்கள் குடும்ப பாரம்பரிய ஓட்டல் மூடப்படக்கூடாது என்பதை உணர்ந்து அந்த ஓட்டலை எப்படி வெற்றிகரமாக நடத்திக் காட்டுகிறார் என்பதே படத்தின் கதை.
மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

{ 0 comments... read them below or add one }

Post a Comment