Posted by Unknown on Monday, 10 February 2014


விஜயைக் கௌரவித்திருக்கும் ஃபேஸ்புக் இணையதளம்!


உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் நிறுவனம் இளைய தளபதி விஜயைத் தனது வருடாந்திர செலிபிரிட்டிகள் சந்திப்பிற்கு அழைத்து கௌரவப்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக் இந்தியாவின் அலுவலகம் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் அமைந்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் வருடாந்திர செலிபிரிட்டிகள் சந்திப்பு சமீபமாக நடைபெற்றது. அந்தச் சந்திப்பில் கலந்துகொள்ள ஃபேஸ்புக் நிறுவனம் விஜயை அழைத்திருந்ததால் விஜய் அந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார். தென்னிந்திய அளவில் ஃபேஸ்புக் நிறுவனத்தினால் தங்களது செலிபிரிட்டிகள் சந்திப்பிற்கு அழைக்கப்பட்ட முதல் நடிகர் இளையதளபதி விஜய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான பிரபலங்கள் ஃபேஸ்புக்கில் இயங்கி வந்துகொண்டிருக்கும்போதும் இளைய தளபதி ஃபேஸ்புக்கில் இணையாமல் இருந்துவருகிறார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு விஜய் விரைவில் தனது ஃபேஸ்புக் அக்கவுண்டினைத் தொடங்கலாம் என்று கூறப்பட்டுவருகிறது. சமீபமாக விஜய் டிவிட்டர் வலைத்தளம் மூலம் தனது ரசிகர்களுடன் நேரடியாக உரையாடினார் என்பது நினைவுகூறத்தக்கது.

{ 0 comments... read them below or add one }

Post a Comment