Posted by Unknown on Monday, 10 February 2014


அஞ்சான் அப்டேட்ஸ்!


இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா – சமந்தா நடித்துவரும் அஞ்சான் திரைப்படத்தின் இரண்டு பாடல்காட்சிகள் மிகச் சிறப்பாக வந்திருப்பதாக அப்படத்தின் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார். இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் மற்றும் யு.டி.வி.மோசன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துவரும் புதிய திரைப்படம் அஞ்சான். சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் மஹாராஷ்டிரா, மும்பை, புனே ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டு வருகின்றது. இப்படத்தின் பாதிப் படப்பிடிப்புகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இப்படத்தின் இரண்டு பாடல்களை ரெக்கார்ட் செய்துவிட்டதாகவும், இதன் விஷுவல்ஸ் மிகச் சிறப்பாக அமைந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
அஞ்சான் திரைப்படம் வருகிற ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தன்று வெளியாகவுள்ளது. அஞ்சான் திரைப்படத்திற்குப் பிறகு சூர்யா வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

{ 0 comments... read them below or add one }

Post a Comment