Posted by Unknown on Monday, 10 February 2014

ஒளிவேகத்தில் சென்றுகொண்டிருக்கும் மெல்லிசை படப்பிடிப்புகள்





விஜய் சேதுபதி மற்றும் காயத்ரி இணைந்து நடிக்கும் மெல்லிசை திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஒளியைப் போல வேகமாக
நடைபெற்றுக்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
தனது கால்சீட்டைப் பார்க்கக்கூட நேரமில்லாத அளவில் படுபிசியாக நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, மெல்லிசை திரைப்படத்தின் இயக்குனர் கூறிய கதையினால் ஈர்க்கப்பட்டு, இதுபோன்ற அட்டகாசமான கதைகளில் நடிப்பதை எக்காரணம் கொண்டும் தவிர்க்கக்கூடாது என்பதால் அப்படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். மெல்லிசை திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கின. முதற்கட்டப் படப்பிடிப்புகள் நிறைவடையும் நிலையில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இப்படத்தி டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

                   
அறிமுக இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில், ரிபெல் ஸ்டுடியோ சார்பில் தீபன் பூபதி மற்றும் ரித்தேஷ் வேலு தயாரிப்பில் உருவாகிவருகிறது மெல்லிசை.
இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் சாம் சார்லஸ் இசையமைக்கவுள்ளார். மெல்லிசை திரைப்படம் இசையை மையப்படுத்திய காதல் திரைப்படமாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

{ 0 comments... read them below or add one }

Post a Comment