Posted by Unknown on Thursday, 13 February 2014

ஜிகிர்தண்டா பர்ஸ்ட் லுக்!


ஜிகிர்தண்டா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். பீட்சா இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜின் இரண்டாவது படம் ஜிகிர்தண்டா. மதுரை பின்னணியில் உருவாகியிருக்கும் படம்.
மதுரை பின்னணியில் தாதாயிசத்தைப் பற்றிய படம் எடுக்க வரும் இயக்குனர் படப்பிடிப்புக்கு முன் தாதாக்களுடன் பழக நேரிடுவதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் என்ற பேச்சு உள்ளது. ஆனால் இது சினிமா சம்பந்தப்பட்ட கதையல்ல என கார்த்திக் சுப்பாராஜ் மறுத்துள்ளார்.
சித்தார்த், லட்சுமி மேனன் நடித்துள்ளனர். லட்சுமி மேனனுக்கு ரோட்டோரம் இட்லி விற்கும் மதுரைப் பெண் வேடம். முதல்முறையாக ஒரு குத்துப் பாடலுக்கு ஆடியுள்ளார்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் டீஸர் யூ டியூபில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். போஸ்டரில் ஏ மியூஸிகல் கேங்ஸ்டர் ஸ்டோரி என குறிப்பிட்டுள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்க பைவ் ஸ்டார் பிலிம்ஸ் கதிரேசன் தயாரித்துள்ளார்.


{ 0 comments... read them below or add one }

Post a Comment