Posted by Unknown on Thursday, 13 February 2014

என்னை கொல்ல முயன்றார்: சல்மான் நாயகி மீது போஜ்புரி நடிகர் புகார்.


மும்பை: சல்மான் கானின் ஜெய்ஹோ பட நாயகி டெய்சி ஷா தன்னை கொலை செய்ய முயன்றதாக போஜ்புரி நடிகர் சத்யேந்திர சிங் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
சல்மான் கானின் ஜெய் ஹோ படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளவர் டெய்சி ஷா.
இந்நிலையில் போஜ்பூரி நடிகரான சத்யேந்திர சிங் என்பவர் டெய்சி மீது உத்தர பிரதேச மாநிலம் மணிபூரி மாவட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது,
நானும், டெய்சியும் சேர்ந்து சோடா என்ற படத்தில் நடித்தோம். அந்த படத்தின் டான்ஸ் மாஸ்டராக கணேஷ் ஆச்சார்யா இருந்தார். படத்தை வி.கே. சிங் இயக்கினார்.
கமலிஸ்தான் ஸ்டுடியோவில் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அப்போது டெய்சி பிரபலமான நடிகரை தன்னுடன்நடிக்க வைக்க விரும்பினார். அதனால் என்னை படத்தில் இருந்து நீக்கிவிட்டனர்.
கடந்த டிசம்பர் மாதம் விபத்தில் சிக்கி காயம் அடைந்தேன். அதன் பிறகு தான் அது விபத்து அல்ல என்னை பாலத்தில் இருந்து தள்ளிவிட வேண்டும் என்றே செய்த கொலை முயற்சி என்று தெரிய வந்தது.
என்னை கொலை செய்ய முயன்ற டெய்சி ஷா, கணேஷ் ஆச்சார்யா, இயக்குனர் வி.கே. சிங் மற்றும் படக்குழுவைச் சேர்ந்த 18 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

{ 0 comments... read them below or add one }

Post a Comment