Posted by Unknown on Thursday, 13 February 2014

தலைமுடி பிரச்சனை: அலர்ஜியால் அவதிப்படும் அஜீத்?

 THALA AJITH


தல அஜீத் பல படங்களில் தொடர்ந்து கருப்பு வெள்ளை முடியுடன் தோன்றி நடித்து வந்தார். ரசிகர்கள் அவரின் இந்த ஸ்டைலுக்கு ‘சால்ட் அண்ட் பெப்பர் ’ என்று செல்லமாக கூறி ரசித்து வந்தனர்.  ஆனால் ஒரு அதிர்ச்சி தரும் தகவல் தற்போது கோடம்பாக்கத்தில் உலா வருகிறது..


அஜீத் தனது தலைமுடியை கருபபாக்க எந்த ‘டை’யை பயன்படுத்தினாலும், அது அவருக்கு சரும அலர்ஜியை ஏற்படுத்திவிடுகிறதாம். இதனால்தான் பல படங்களாக அவர் தனது சால்ட் பெப்பர் தோற்றத்திலேயே நடித்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த வெள்ளை இன்னும் அதிகமாகி வருதாகவும்,, கவுதம்மேனன் படத்தில் நடிக்கவுள்ளதால்  வெள்ளை முடியை கருப்பாக்கியே தீர வேண்டிய கட்டாயத்தில் அஜீத் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழலிவ் எப்படியாவது உங்க முடிய கருப்பாக்கிடுங்க என்று கவுதம் மேனன் கூறினாராம். ஆகையால் உலகின் பல பகுதிகளில் இருந்தும் விலை உயர்ந்த ஹேர் டைகள் வரவழைக்கப்பட்டு நாள் தோறும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், சரும நோய் நிபுணர்கள் அடங்கிய குழுவே அஜீத்தின் தலைமுடியை கருப்பாக்கிவிட போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்று கோடம்பாக்க வட்டாரத்தில் கூறப்படுகிறது.

{ 0 comments... read them below or add one }

Post a Comment