Posted by Unknown on Tuesday, 11 February 2014

இயக்குனர்களின் நடிகையான ஸ்ரீதிவ்யா!




வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றி காரணமாக, பட்ஜெட் படாதிபதிகளின் பட்டியலில் இடம் பிடித்து விட்டார் ஸ்ரீதிவ்யா.
அமலாபால், லட்சுமிமேனன் உள்ளிட்ட சில நடிகைகள் எந்த மாதிரி கதையை சொன்னாலும், அதில் குற்றம் குறைகளை கண்டுபிடித்து நடிக்க சம்மதம் சொல்லி வந்தநிலையில, டைரக்டர்களின் கதையை அப்படியே படமாக்க ஸ்ரீதிவ்யா முழு ஒத்துழைப்பும் கொடுப்பதால், இவர்தான் நமக்கு ஏற்ற பெஸ்ட் நடிகை என்று அவர் பக்கம் திரும்பி நிற்கின்றனர்.
தற்போது, பென்சில், ஈட்டி, நகர்ப்புறம், காட்டுமல்லி, வீரதீரசூரன் ஆகிய படங்களில் நடித்து வரும் ஸ்ரீதிவ்யா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாசுடன் நடித்து வரும் பென்சில் படத்தில் ப்ளஸ்-2 பள்ளி மாணவியாக நடிக்கிறார்.
அதற்கேற்ப குட்டை பாவாடை உடையணிந்து நடிப்பதோடு, பாடல் காட்சிகளில் கிளாமர் உடைதரித்தும் கவர்ச்சிகரமாக நடிக்கிறாராம்.

குறிப்பாக, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கிராமத்து கெட்டப்பில் நடித்த ஸ்ரீதிவ்யா தன் மீது குடும்ப நடிகை என்ற இமேஜ் விழுந்து விடக்கூடாது என்பதற்காகவே பென்சில் மட்டுமின்றி ஈட்டி படத்திலும் கிளாமர் கதாநாயகியாக களமிறங்கியிருக்கிறார். அதோடு, காஸ்டியூம் விசயத்தில் எந்த கட்டுப்பாடு போடாமல், முடிந்தவரை இயக்குனர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து நடித்துள்ளாராம்.

 இதனால், இப்போதைய புது வரவு நடிகைகளில் ஸ்ரீதிவ்யா, இயக்குனர்களின் நாயகியாக இருக்கிறார் என்று அவரை வைத்து படம் பண்ணிய இயககுனர்கள் கோடம்பாக்கத்தில் தண்டோரா போடடு வருகின்றனர். இதனால், கண்டிசன் நடிகைகளிடம் கதை சொல்லிவிட்டு டர்டர்ராகிக்கொண்டு கிடந்த சில டைரக்டர்கள் ஸ்ரீதிவ்யா பக்கம் சாய்ந்திருப்பதோடு, அவர் கேட்காமலேயே கூடுதலான பேமண்டும் கொடுத்து புக் பண்ணி வருகின்றனர்.


{ 0 comments... read them below or add one }

Post a Comment