Posted by Unknown on Thursday, 13 February 2014

இனி சாகும் வரை நாடக நடிகை தான்: ஐஸ்வர்யா பரபரப்பு பேச்சு..


நடிகை லட்சுமியின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யா ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின். இப்போது மேடை நாடகத்தில் நடித்து வருகிறார். ஒய்.ஜி.மகேந்திரனுடன் இணைந்து அவர் நடித்து வரும் இரண்டாம் ரகசியம் என்ற நாடகம் நாடக உலகில் புகழ்பெற்றது.
இப்போது இரண்டாம் உலகம் நாடகத்தை ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ் நிறுவனம் தனது கம்பெனி விளம்பரத்துக்காக சென்னை முழுவதும் இலவசமாக நடத்துகிறது. மார்ச் மாதம் முழுவதும் வாணி மஹால், காமராஜர் அரங்கம், கிருஷ்ணகான சபா போன்ற இடங்களில் நடக்கிறது. இது தொர்பான பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா பேசியதாவது:
அமெச்சூர் ஆர்ட்டிஸ் நாடக சபாவில் என் பாட்டி ருக்மணி நடித்துள்ளார், என் அம்மா லட்சுமி நடித்துள்ளார். இப்போது மூன்றாவது தலைமுறையாக நான் நடிக்க வந்திருக்கிறேன். ஏன் சினிமாவில் நடிக்காமல் நாடகத்தில் நடிக்கிறாய் என்று எல்லோரும் என்னை கேட்கிறார்கள்.
சினிமாவில் யார் வேண்டுமானாலும் நடித்து விடலாம். தப்பு செய்தால் ரீடேக் போகலாம். ஆனால் நாடகம் அப்படி இல்லை. அழகுற காட்சியில் அப்போதே அழ வேண்டும், சிரிக்கிற காட்சியில் அப்போதே சிரிக்க வேண்டும், சின்ன தவறுகூட ஆடியன்சை சிரிக்க வைத்துவிடும் நமக்கு அவமானமாக போய்விடும். இந்த சவால் எனக்கு பிடித்திருந்ததால் நாடகத்தில் நடிக்கிறேன்.

சினிமாவில் நடித்தை விட நாடகத்தில் நடிப்பதையே பெருமையாக நினைக்கிறேன். சினிமாவில் எத்தனையோ கேரக்டர்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இரண்டாம் ரகசியம் நாடகத்தில் நான் நடித்து வரும் கேரக்டர்தான் எனக்கு ரொம்ப பிடித்த கேரக்டர்.
ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிப்பது வெறுத்து விட்டது. எதுவும் வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தபோதுதான் ஓய்.ஜி.மகேந்திரன் மாமா என்னை நாடகத்தில் நடிக்க அழைத்தார். அவர் வீட்டை கூட்டி பெருக்குறதுக்கு கூப்பிட்டிருந்தால்கூட நான் போயிருப்பேன்.
அந்த அளவுக்கு அவர் குடும்பத்துக்கு நான் கடமைப்பட்டிருக்கேன். நாடகத்தில் நடிக்க கூப்பிட்டதும் உடனே ஒத்துக் கொண்டேன். இனி கடைசிவரையில் நாடகம்தான். அதற்காக சினிமா வேண்டாம் என்று சொல்லவில்லை.
நல்ல கேரக்டர்கள் வந்தால் சினிமாவிலும் நடிப்பேன். ஆனால் நாடகத்துக்குதான் முக்கியத்தும் தருவேன். சாகும்வரை நாடகத்தில் நடித்துக் கொண்டே இருப்பேன்.
இவ்வாறு ஐஸ்வர்யா பேசினார்.
ஒய்.ஜி.மகேந்திரன், ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ் நிறுவன துணை தலைவர் பாலாஜி, பொது மேலாளர் யசோதா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

{ 0 comments... read them below or add one }

Post a Comment