‘வாள்’ படத்தில் விஜய் இரட்டை வேடம்?

Posted by Unknown on Tuesday, 4 February 2014

வாள்’ படத்தில் இளைய தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கி என்ற வெற்றிப் படம் கொடுத்த ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் விஜய் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர்.



இதனால் இந்த படத்திற்கு தற்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் வாள் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவலும் காற்று வழியாக கசிந்துள்ளன.
முன்னதாக விஜய் அழகிய தமிழ் மகன் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தினார். தற்போது வாள் படத்திலும் இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.

{ 0 comments... read them below or add one }

Post a Comment